Latestமலேசியா

ஜப்பானியக் கார்களுக்கான தேவை சரிவு; EV கார்கள் மீது திரும்பும் மக்களின் கவனம்

கோலாலாம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் ஜப்பானியக் கார்களுக்கான தேவை குறைந்து வருகிறது.

அரசாங்கம் EV எனப்படும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருவதால், Toyota, Honda, Mazda போன்ற கார்கள் 30 விழுக்காட்டு சந்தை பங்கிலிருந்து 26 விழுக்காட்டுக்கு சரிந்துள்ளன.

அதே நேரத்தில், தேசியக் கார் நிறுவனங்களான புரோட்டோன் மற்றும் பெரோடுவா இரண்டும் தொடர்ந்து 60 விழுக்காட்டுக்கும் மேல் விற்பனையை தக்க வைத்துள்ளன.

சீன நிறுவனங்களும் வேகமாக முன்னேறுவது குறிப்பிடத்தக்கது; Chery நிறுவனம் 2024-ல் 4,600 கார்களை மட்டுமே விற்ற நிலையில், கடந்தாண்டில் 33,000-க்கும் மேல் விற்பனை செய்து அபரிமித வளர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளது.

2022-ல் அறிமுகமான அரசாங்கத்தின் மின்சார வாகன ஊக்குவிப்புகள் மக்களின் விருப்பங்களையும் தேர்வுகளையும் மாற்றியதாக முதலீடு-வாணிபம்-தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி கூறினார்.

மலேசிய கார் சந்தை மின்சார எதிர்காலத்தை நோக்கிவேகமாக நகர்கிறது; ஜப்பானிய நிறுவனங்கள் அதனை பின்தொடர போராடுவது இதன் மூலம் தெரியவருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!