
ஜிஞ்சாங்கில் ஏ.டி,எம் இயந்திரங்களின் கண்ணாடிகளை உடைத்த ஆடவன் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 19-
ஏ.டி.ஏம் பணப் பட்டுவாடா இயந்திரத்தின் ஸ்கிரின் கண்ணாடிகளை உடைத்ததன் தொடர்பில் நேற்று மாலை மணி 3.21 அளவில் 65 வயதுடைய ஆடவன் கைது செய்யப்பட்டான். அந்த நபர் Jinjang வட்டாரத்திலுள்ள பல்வேறு வங்கிக் கிளைகளில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களின் ஸ்கிரின்களை உடைத்திருப்பதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரி சகோனி ( Basri Sagoni ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் , தலைக் கவசம், இக்குற்றத்திற்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கல்லையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கத் தவறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தினால் அந்த ஆடவன் ஒரு கல்லைப் பயன்படுத்தி இயந்திரத்தின் ஸ்கிரின் எனப்படும் திரையை உடைத்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த நபர் கைது செய்யப்பட்டதன் மூலல் இதற்கு முன்னர் ஐந்து ஏ.டி.ஏம் இயந்திரங்களின் ஸ்கிரின்கள் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர். முன்னதாக, ஜின்ஜாங்கைச் சுற்றியுள்ள பல ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டதில் 64,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.



