Latestமலேசியா

ஜித்ரா டோல் சாவடியில் Honda Civic கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் இளம் காதல் ஜோடி உயிரிழப்பு

ஜித்ரா, ஜனவரி-20 – கெடா, ஜித்ரா டோல் சாவடியில் நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்தில், Honda Civic கார் கட்டுப்பாட்டை இழந்து, டோல் தடுப்பில் மோதிக் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.

இதில், காரிலிருந்த இளம் காதல் ஜோடியான 20 வயது Pang Seng Ching, 19 வயது Tan Hui Shan இருவரும் உடல் கருகி மாண்டனர்.

விபத்து, அதிகாலை 1.15 மணியளவில், வடக்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த ஜித்ரா தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இருவரின் உடல்களும் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!