சென்னை, அக்டோபர் 7 – நடிப்பில் சாதிக்க துடிக்கும் சாமானிய பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக, மகா நடிகை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியாவிலிருந்து பிரபல நடிகை சாந்தினி கோர்ரும் கலந்து கொண்டுள்ளார்.
தேர்வு சுற்றில் தனது அசாதாரண நடிப்பில், நடுவர்களின் மனம் கவர்ந்து, அடுத்து சுற்றுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.
முகேன் ராவ், மூன்நிலா, Irfan Zaini, Sharath Nair, ஆகிய நடிகர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை சாந்தினி கோர் தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளார்.