ஜெராண்டுட் , ஜன 7 – இன்று அதிகாலை Bukit Mentimun-னில் Jalan Jerantut-Kuala Tembeling மலைப்பகுதி சாலையை டிரெய்லர் லோரி கடக்கத் தவறியதால், சாலையின் இரு திசைகளிலும் வரிசையாக பலவ வாகனங்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் தொடர்ந்து செல்லமுடியாத சூழ்நிலைக்கு உள்ளாகின. அதிகாலை 3 மணியளவில் செம்பனைக் குலைகள் ஏற்றப்பட்ட டிரெய்லர் சாலையோரத்தில் ஒதுங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தாக ஜெரான்டுட் (Jerantut) மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சுக்ரி முகமட் ( Zukri Muhammad ) தெரிவித்தார். இதுபோன்ற சம்பவத்தினால் தினமும் ஏராளமானோர் பயணிக்கும் பாதையின் இரு திசைகளிலும் 100 முதல் 200 வாகனங்கள் சிக்கிக் கொள்வதாக மதிப்பிடப்டுகிறது.
அந்த சாலையை கடக்க முடியாதது குறித்து எச்சரிக்கை அடையாளத்தை வைக்கும்படி போலீசை கேட்டுக்கொள்வதற்கு Kuala Tembeling போலீஸ் நிலையம் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியை அப்புறப்படுத்தும் வரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு அங்கு போக்குவரத்து போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த சம்பவத்தினால் எவரும் காயம் அடையவில்லையென சுக்ரி முகமட் தெரிவித்தார்.