Latestமலேசியா

ஜோகூர் பாருவில் கட்டுமானத் தளத்தில் கிரேன் ஓட்டுநர் திடீர் மரணம்

ஜோகூர் பாரு, ஜனவரி-24-ஜோகூர் பாருவில் Residensi Puncak Astin கட்டுமானத் தளத்தில், கிரேன் கோபுர ஓட்டுநர் கிரேன் அறைக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று காலை 9 மணியளவில் தகவல் வந்ததும், தீயணைப்பு-மீட்புப் படையினர் சம்பவ இடம் விரைந்தனர்.

45 மீட்டர் உயரத்தில் கிரேன் கோபுரத்தின் மேலேறி 33 வயது Muhamad Aliff Ishak-கின் உயிரற்ற உடலைக் கீழிறக்கினர்.

போலீஸ் விசாரணையில், அவரது உடலில் எந்தக் காயமும் இல்லை, குற்ற அம்சங்களும் இல்லை என உறுதிச் செய்யப்பட்டது.  சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!