
ஜோகூர் பாரு, பிப்ரவரி-15 – ஜோகூர் பாரு, தாமான் பெலாங்கி, ஜாலான் கூனிங்கில் நேற்று மாலை பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், 15 வாகனங்கள் சேதமுற்றன.
இரு வணிகத் தளங்களும் அதில் பாதிக்கப்பட்டன.
சுமார் 1 மணி நேரத்திற்கு பெய்த கனமழையும் வீசியப் புயல் காற்றுமே மரம் சாய்ந்ததற்கு காரணம் என, மாநில தீயணைப்பு-மீட்புக் குழு தெரிவித்தது.
மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்து, 10 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அக்குழு வாகனங்களை மீட்டது.
அச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.