
சென்னை, ஜூலை-5 – மலேசிய தாஸ்லி நிறுவன இயக்குனரும், தன்முனைப்பு பேச்சாளருமான டத்தோ Dr ரவீக்கு, தமிழ்நாட்டில் நடைபெற்ற International Laureates Recognition Conclave 2025 மாநாட்டில், ‘Excellency in Wellness’ விருது வழங்கப்பட்டது.
மருத்துவம், அறிவியல், ஆன்மீகம், கல்வி மற்றும் சமூக நலத் தொண்டுகளை ஒருங்கிணைத்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நரம்பியல், சித்தம், யோகா உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு, “Healing Without Borders” என்ற திட்டம் மூலம் எல்லைகளை கடந்த ஆரோக்கியச் சேவையை அவர் வழங்கி வருகிறார்.
இவருடைய பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் முன்னணி அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன.
இந்த மாநாட்டை யு.என்.எஸ் ஆராய்ச்சி மையம் நடத்தியது.
அவரின் சாதனைகள் மலேசியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியுள்ளதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.