டி.என்.பி இணைப்பில் மோதி பாராமோட்டோர் ஓட்டுநர் காயம்

மலாக்கா, டிச 22 – மலாக்காவில் Budaya Duyung அனைத்துலக ஓட்டப் போட்டியின்போது மின்சார இணைப்பில் மோதியதைத் தொடர்ந்து பாராமோட்டார் ஓட்டுநர் ஒருவர் நெல் வயலில் கீழே விழுந்ததால் காயத்திற்குள்ளானார்.
இந்த சம்பவம் நேற்று காலை மணி 8.40 அளவில் நிகழ்ந்தது. சிலாங்கூர் மாநில பாராமோட்டார் கிளப்பைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நெல் வயலுக்கு உயரே சென்றுகொண்டிருந்தபோது பாராமோட்டார் இயந்திரத்தில் ஏற்பட்ட நுட்ப பிரச்னை காரணமாக கீழே விழுந்தார்.
புக்கிட் பாருவிலுள்ள Kampung Ku Sayangகில் நெல்வயலில் சுமார் 10 மீட்டர் பகுதியில் அந்த பாராமோட்டார் ஓட்டுநர் விழுந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் கிறிஸ்தோபர் பாதிட் (Chiristopher patit ) தெரிவித்தார். எனினும் பாதிக்கப்பட்ட நபர் முகத்தில் மட்டுமே சிறிது காயத்திற்கு உள்ளான வேளையில் அவரது பாராமோட்டோர் இயந்திரம் சேதம் அடைந்தது. அந்த சமயத்தில் நெல் வயலில் இருந்த பொதுமக்களில் எவரும் காயம் அடையவில்லை.
பாதிக்கப்பட்ட மின் இணைப்பை ஆய்வு செய்ய தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஊழியர்களும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்தபோதிலும் , அந்த இணைப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக Christopher Patit வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த தனித்துவமான போட்டியின்போது நடைபெற்ற தருணங்களை காட்டும் சம்பவத்தின் பல வீடியோ கிளிப்புகள் வைரலாகி வருகின்றன. இதில் இந்தோனேசியா உட்பட நாடு முழுவதிலுமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.



