Latestமலேசியா

டிக் டோக்கில் 700,000 followers-களைத் தொட்டது வணக்கம் மலேசியா; மொத்தம் 1.25 பின்தொடர்பாளர்களுடன் மாதத்திற்கு 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் முன்னணி

கோலாலம்பூர், மார்ச்-9 – நாட்டின் முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’, தனது நீண்ட நெடிய பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆம், அதன் அதிகாரப்பூர்வ டிக் டோக் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 700,000 பேரை எட்டியுள்ளது.

பாரபட்சமமின்றி செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் வணக்கம் மலேசியாவின் நம்பகத்தன்மைக்கு, ஓர் அங்கீகாரமாக இது விளங்குகிறது.

அதுமட்டுமின்றி Tik Tok, Facebook, YouTube, Instagram என 4 சமூக ஊட்கத் தளங்களில் ஒட்டுமொத்தமாக 1.25 மில்லியன் Followers-களுடன் மாதத்திற்கு 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று நாட்டின் முதன்மை தமிழ் ஊடகமாக வணக்கம் மலேசியா தொடர்ந்து செல்கிறது.

நாட்டு நடப்பு, அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொருளாதாரம், சுகாதாரம், உலக நடப்பு, சமூகச் செய்திகள் என அத்தனையும் வணக்கம் மலேசியாவின் சமூக ஊடகத் தளங்களில் கிடைக்கிறது.

அதுவும் நேயர்களுக்கு ஏற்ற வகையில் எளிமையாகவும் சுருக்கமாகவும் அவை வழங்கப்படுகின்றன.

ஆங்காங்கே நடக்கும் சமூக நிகழ்வுகள், மக்களின் குறைகள், தமிழ்ப் பள்ளி விவகாரங்கள் உள்ளிட்டவற்றையும் வீடியோ வடிவில் வணக்கம் மலேசியா வழங்கி வருகிறது.

Tik tok-கில் மட்டும் இந்த 700,000 followers-கள் என்பது நேயர்களுக்கும் வணக்கம் மலேசியாவுக்குமான இறுக்கமான பிணைப்பை பிரதிபலிக்கிறது.

இன்றளவும் முழு ஆதரவை வழங்கி வரும் நேயர்களுக்கும் பொது மக்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்ளும் வணக்கம் மலேசியா நிர்வாகம், தமது கடமையில் தொடர்ந்து முனைப்பு காட்டும் என உறுதி அளிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!