
கோலாலம்பூர், மார்ச்-1 – மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2-ஆம் தேதி தங்களின் இரமலான் புனித நோன்பைத் தொடங்குகின்றனர்.
அரச முத்திரைக் காப்பாளர் Tan Sri Syed Danial Syed Ahmad நேற்றிரவு தொலைக்காட்சி நேரலையில் அதனை அறிவித்தார்.
நாடு முழுவதும் 29 இடங்களில் நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டது.
அதனடிப்படையில் இரமலான் நோன்பு மாதம் ஞாயிறு தொடங்குவதாக முடிவானது.
இந்த நோன்பு தொடங்கும் நாள் நிர்ணயம், மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஆணைப்படி நடப்பதாக அவர் தெரிவித்தார்.