டிரம்ப்பின் வரி உயர்வு அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்க விலை

பெங்களூரு, ஜனவரி-31 – தங்க விலை இன்று ஒரு கிராமுக்கு 410 ரிங்கிட்டாக பதிவாகி வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது வார உயர்வைப் பதிவுச் செய்யயும் தயாராக உள்ளது.
இறக்குமதிப் பொருட்களுக்கான வரி உயர்த்தப்படுமென்ற அமெரிக்க அரசாங்கத்தின் அச்சுறுத்தலால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள கவலை, தங்க விலை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
அதே நேரத்தில் மத்திய ரிசர்வ் கொள்கையின் திசையை மதிப்பிடுவதற்கான முக்கிய பணவீக்க அறிக்கைகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படுமென, அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று மீண்டும் எச்சரித்திருந்தார்.
அந்த அச்சுறுத்தல்கள் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதோடு வர்த்தகப் போரையும் தூண்டும் சாத்தியமுள்ளது; இதனால் பாதுகாப்பான சொத்தாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்கின்றது.
இதற்குக் காரணம், தங்கம் பாரம்பரியமாகவே விலை அழுத்தங்கள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.
டிரம்பின் வரி திட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், நவம்பர் மாத இறுதியிலிருந்து COMEX-கால் அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகளுக்கு 12.9 மில்லியன் ட்ராய் அவுன்ஸ் தங்கம் அனுப்பப்பட்டுள்ளது.
இது, 2022-குப் பிறகு மிக அதிகமாக, தங்கக் கையிருப்புகளை 73.5 சதவீதம் அதிகரித்து 30.4 மில்லியன் அவுன்ஸ்களாக உயர்த்தியுள்ளது.