
லண்டன், நவம்பர்-5 – உலகப் புகழ்ப் பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பேக்கமுக்கு, Sir பட்டத்தைக் கொண்டு வரும் இங்கிலாந்து அரண்மனையின் கௌரவப் பட்டம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, பேக்கமின் ஆசையையும், அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்திச் செய்யும் வகையில், இவ்வாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவருக்கு அவ்விருதை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விண்ட்சர் அரண்மனையில் மன்னர் சார்ல்ஸ் நேற்று பேக்கமுக்கு அந்த Sir பட்டத்தைக் கொண்டு வரும் knighhood விருதை வழங்கி கௌரவித்தார்.
பேக்கமோடு, மனைவி விக்டோரியாவும் அவரின் பெற்றோரும் அந்நிகழ்வில் பங்கேற்று பூரித்தனர்.
விருது பெற்ற மகிழ்ச்சியில், “நாட்டை பெரிதும் நேசிக்கும் எனக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” என பேக்கம் நெகிழ்ந்தார்.
மென்சஸ்டர் யுனைடெட் மற்றும் இங்கிலாந்து தேசியக் கால்பந்து அணிகளின் முன்னாள் வீரருமான பேக்கம், ஓய்வுப் பெற்ற பிறகும் பிரபலமாக வலம் வருகிறார்.
50 வயதில் உலகம் முழுவதும் இன்னமும் கோடிக்கணக்கான இரசிகர்களை அவர் கொண்டுள்ளார்.
மைதானத்திற்கு வெளியிலிலும் புகழின் உச்சிலிருந்த போதும், அவருக்கு ‘சர்’ பட்டம் என்ன காரணத்தாலோ வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
தற்போது அது நிறைவேறியிருப்பது அவரின் இரசிகர்கள் மட்டுமின்றி கால்பந்து ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



