Latestமலேசியா

தங்காக்கில் சாலையோர மோதலின்போது பெண் கதறி அழும் காணொளி வைரல்

தங்காக், மார்ச் 25-ஜோகூரில் தங்காக் பகுதியில் சாலையோரத்தில் இரண்டு ஆடவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வேளையில் அங்கிருந்த ஒரு பெண் கதறி அழும் காட்சி தொடர்பான காணொளி வைரலானது.

இந்தச் சண்டையின் காரணத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையிலான உறவுமுறையையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற போதிலும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுமாறு அங்கிருந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விளையாட்டுப் பொருட்கள் விற்கும் பிரபலமான கடைக்கு முன்னால் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் மற்றும் கைகலப்பை தடுக்க சுமார் பன்னிரண்டு ஆண்களும் பெண்களும் முயன்றனர்.

ஒரு கட்டத்தில், “இவள் என் மனைவி,” என்று ஒருவர் கத்துவதையும் மற்றொருவர் “வா, நேருக்கு நேர் மோதலாம்,” என்று அவருக்குச் சவால் விடுப்பதையும் , நீல நிற Baju Kurung அணிந்த ஒரு பெண் வெளிப்படையாகவே கலக்கத்துடன் காணப்படுவதையும் அந்த காணொளியில் காணமுடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!