
தஞ்சோங் மாலிம், நவம்பர்-15, பேராக், தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் தொடர்ச்சியாக நடந்த ஏழு கடை கொள்ளைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதில் திருப்பம் என்னவென்றால், அவர் பெண் வேடமிட்ட ஆண் என்பதே…
சிலாங்கூரைச் சேர்ந்தவர் என நம்பப்படும் 40 வயது அவ்வாடவர், படங்களில் வருவது போல் பெண்கள் உடையில் மாறுவேடத்தில் கடைகளில் நுழைந்து கொள்ளையிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நவம்பர் 12-ஆம் தேதி ஒரே நாளில் அந்த 7 கடைகளிலும் அந்நபர் கைவரிசைக் காட்டியது, CCTV கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது.
7 கடைக்காரர்களும் போலீஸில் புகார் செய்துள்ளனர்; ஆனால் மூவருக்கு மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது.
5,200 ரிங்கிட் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை நட்டம் உட்படுத்தியுள்ளது.
இதையடுத்து சந்தேக நபருக்கு வலை வீசி வரும் போலீஸார், தகவல் தெரிந்தோர் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.



