Latest
தடம்புரண்டு bundle கடைக்குள் புகுந்த பெரோடுவா ஆக்சியா; ஓட்டுநர் காயம்

யான், டிசம்பர்-29,
கெடா, யான், சிம்பாங் அம்பாட் செடாகா (Simpang Empat Sedaka) பகுதியில், ஒரு பெரோடுவா ஆக்சியா கார் கட்டுப்பாட்டை இழந்து, bundle கடைக்குள் புகுந்தது.
நேற்று காலை 11.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
ஆக்சியா கார், முன்னதாக ஒரு புரோட்டான் பெர்சோனா வாகனத்துடன் மோதியதாக போலீஸார் கூறினர்.
50 வயது ஓட்டுநர் சிறிய காயங்களுடன் யான் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.
30 வயது பெர்சோனா ஓட்டுநர், காயமின்றி தப்பினார்.
அந்த நேரத்தில் கடைக்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
கடை உரிமையாளரும் ஓட்டுநரும் புகார் அளித்துள்ளதை போலீஸ் உறுதிப்படுத்தியது.



