
வாஷிங்டன், ஜூன் 18 – ஜூன் 16 ஆம் தேதியன்று டிரம்ப் அமைப்பு
499 டாலர் விவேக கைதொலைபேசியுடன் அதன் சொந்த பிராண்டட் கைதொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியது. இது முக்கிய தொலைத்தொடர்பு வழங்குனர்களுக்கு மாற்றாக பழமைவாத பயனீட்டாளர்களை ஈர்க்கும் அண்மைய நடவடிக்கையாக அமைந்துள்ளது. டிரம்ப் மொபைல் என்று அழைக்கப்படும் இந்த முயற்சி மன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் டவரில் அறிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அழைப்பு மையம் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகளும் இதில் இடம்பெறும்.
தொலைபேசியில் டெலிமருத்துவ சேவைகள், வாகனங்களுக்கான சாலையோர உதவி மற்றும் 100 நாடுகளுக்கு வரம்பற்ற குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட முழுமையான தொகுப்பை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். அனைத்தும் ஒரு நிலையான மாதாந்திர கட்டணத்தில் அடங்கியிருப்பதாக அதிபரின் மூத்த மகன் டோனல்ட் டிரம்ப் ஜூனியர் கூறினார். இந்த நடவடிக்கை, சமூக ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் தற்போது தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பழமைவாத சித்தாந்தத்துடன் இணைந்த தளங்களை உருவாக்கும் வலதுசாரி ஊடகங்கள் மற்றும் வணிகங்களிடையே ஒரு போக்கை பிரதிபலிக்கிறது.