தாய் ,குழந்தை உட்பட 8 அமலாக்க அதிகாரிகளை எம்.ஏ.சி.சி கைது செய்தது

கோலாலம்பூர், செப் 7 – நெகிரி செம்பிலான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட எட்டு அமலாக்க நிறுவன அதிகாரிகளில் ஒரு தாயும் அவரது மகளும் அடங்குவர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Rentas மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என MACC விசாரணைப் பிரின் மூத்த இயக்குநர் டத்தோ சைபுல் எஸ்ரால் அரிப்பின் ( Saiful Ezral Arifin ) கூறினார். அனைத்து சந்தேக நபர்களும் மற்றொரு கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாட்டினரை உள்ளே நுழைய வசதி செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 80,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கத்தையும் 50,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளையும் MACC அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 20,000 ரிங்கிட் மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள், 106,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு கார்கள் மற்றும் 20,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 12,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், 5,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் 2,360 தாய்லாந்து பாட் நாணயம் , 29,000 ரிங்கிட் மதிப்புள்ள தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் 200,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர தாபோங் ஹாஜி மற்றும் அமானா சஹாம் பூமிபுத்ரா சம்பந்தப்பட்ட சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கணக்குகளையும் MACC முடக்கியது.