Latestமலேசியா

தாய்லாந்தின் செல்லப் பிள்ளையான Moo Deng நீர்யானைக் குட்டிக்கு 6 லட்சம் ரிங்கிட் அன்பளிப்பை வழங்கிய துபாய் இரசிகர்

பேங்கோக், அக்டோபர்-15, தாய்லாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்து, தனது சுட்டித்தனத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள நீர் யானைக் குட்டிக்கு, துபாயைச் சேர்ந்த தீவிர இரசிகரிடமிருந்து 650,000 ரிங்கிட் அன்பளிப்புக் கிடைத்துள்ளது.

குட்டையான அரிய வகை pygmy இனத்தைச் சேர்ந்த நீர் யானையான Moo Deng பிறந்து 3 மாதங்கள் தான் ஆகின்றன.

வைரலானதால், அதனைப் பார்ப்பதற்கென்றே தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆனால் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுவதாக வருகையாளர்கள் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி துபாயிலிருந்து தாய்லாந்து பறந்து வந்த ஒரு வர்த்தகர், Moo Deng நீர்யானைக் குட்டியின் பாதுகாவலரிடம் 50 லட்சம் Baht அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 650,000 வெள்ளியை ஒப்படைத்துச் சென்றார்.

‘உலகின் மிக அழகான நீர்யானைக் குட்டியான Moo Deng-கிற்கு…’ என காசோலையில் அவர் பெயர் எழுதிக் கொடுத்தார்.

தனது அழகாலும் சேஷ்டைகளாலும் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் Moo Deng-கிற்கு ரொக்கப் பணம் பரிசாக வருவது இதுவொன்றும் முதல் முறையல்ல.

ஏற்கனவே ஒரு வர்த்தகர் 4,600 ரிங்கிட் கொடுத்திருப்பதாக மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!