
பேங்கோக், மார்ச்-31-தாய்லாந்தில், 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
சாய்ந்து படுத்திருக்கும் பழங்கால புத்தர் சிலையின் கீழ் இந்துக் கடவுளான பிரம்மாவின் உருவம் உள்ளிட்ட முக்கியத் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Wat Tammachak Sema Ram கோவில் பகுதியில் நீரோட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை த்வாரவதி காலத்தைச் சேர்ந்தவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல ஆபரணங்கள், மோதிரங்கள், தோடுகளும் அடங்கும்.
இவை மண் பானையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்டுபிடிப்பில் மிக முக்கியமான ஒன்றாக, இந்துக் கடவுள் பிரம்மா உருவம் பொறிக்கப்பட்ட ஒரு உலோகத் தகடு கிடைத்துள்ளது.
இது, அப்போதே புத்த மதத்துடன் இந்து மரபுகளும் இணைந்து இருந்ததை காட்டுகிறது.
இந்த பொருட்கள் மத சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது இந்த தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.



