
தாவாவ், டிசம்பர்-30, சபா, தாவாவில் மதுபோதையில் வங்கியொன்றின் கண்ணாடிக் கதவில் காரை கொண்டு மோதிய ஆடவன் கைதாகியுள்ளான்.
ஜாலான் மக்காமாவில் நேற்று காலை 5.15 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது 25 வயது அவ்விளைஞன் தாவாவ் பட்டணத்திலிருந்து தஞ்சோங் பத்துவில் உள்ள தனது வீட்டுக்குக் காரில் தனியாகப் போய்க் கொண்டிருந்தான்.
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சில வாகனங்களை மோதித் தள்ளி விட்டு, கடைசியாக அந்த வங்கிக் கண்ணாடிக் கதவையும் மோதி உடைத்தது.
எனினும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என, தாவாவ் போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசின் (Jasmin Hussin) தெரிவித்தார்.
கைதான ஆடவனுக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லையென்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.