
செர்டாங், மார்ச் 25-செர்டாங்கில் உள்ள ஒரு நினைவுப் பூங்காவிலிருந்து இறந்தவர்களின் அஸ்தியுடன் கலசங்கள் திருடப்பட்டது குறித்தும், அதனை திரும்ப பெறுவதற்காக பணம் வழங்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக போலீஸ் இன்னமும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நால்வரின் அஸ்தியைக் கொண்ட கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் , Superintendan ஜொஹாரி யஹ்யா (Johari Yahya) தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதோடு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியை போலீஸ் நிறைவு செய்து வருகிறது.
விசாரணைக்கு உதவுவதற்காக, இதுவரை 10 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கலசங்களை முழுமையாக சரிபார்ப்பது மற்றும் ஒட்டு மொத்த ஆய்வுகளை நினைவு பூங்காவின் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜொஹாரி குறிப்பிட்டார்.
இந்த திருட்டு விவகாரத்தில் உள்தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.



