
புது டெல்லி, பிப்ரவரி-28-தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வழங்கியுள்ளனர்.
மோடி, இந்த புதுமணத் தம்பதிக்கு தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தார்.
அவர்களின் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக வலம் வரும் தேவரகொண்டாவும், தமிழ்-தெலுங்கு தாண்டி இந்தி திரையுலகிலும் வெற்றிக் கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகாவும், கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதில் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்ற நிலையில் திருமண வரவேற்பு விழா விரைவில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் அரசியல் மற்றும் பன்மொழி திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் நட்சத்திரத் திருமணமாக இது திரையுலக ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



