
புத்ராஜெயா, அக்டோபர்-14,
அரசாங்க பல்கலைக்கழகங்கள், போலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகள் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் 24 வரை வகுப்புகளை முழு இயங்கலை வாயிலாகவோ அல்லது hybrid எனப்படும் பகுதி இயங்கலை வாயிலாகவோ நடத்தலாம்.
இந்து மாணவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தீபாவளி கொண்டாட வாய்ப்பு வழங்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்த பிறகு எடுக்கப்பட்ட இம்முடிவானது, மலேசியாவின் பன்முக சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
எனினும், இந்த ஏற்பாடு, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலையைப் பொருத்தது.
கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வரை பிரச்னை இல்லையென அமைச்சு கூறியது.
இவ்வேளையில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இந்து சமூகத்தினருக்கும் இந்த தீபாவளி சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் எனவும் அமைச்சு வாழ்த்தியது.
தீபாவளி அக்டோபர்-20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.