Latestமலேசியா

துவாரான் கார் சேமிப்புக் கிடங்கில் தீ; 700 கார்கள் நாசம்

துவாரான், மார்ச்-16-சபா, துவாரானில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் சுமார் 700 கார்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

அருகிலிருந்த காட்டுத்தீ இந்த கார் சேமிப்புக் கிடங்கிற்கு பரவியிருக்கலாம் என தொடக்கக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர அழைப்புக் கிடைத்து பல நிலையங்களிலிருந்து வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும் சேதம் ஏற்பட்டாலும், தீயணைப்பு வீரர்களால் சுமார் 30 கார்களைக் காப்பாற்ற முடிந்தது.

நல்லவேளையாக யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான உண்மைக் காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!