Latestமலேசியா

தூங்கி வழிந்த காரோட்டி; சரஸ்வதி தமிழ்ப் பள்ளி தடுப்புச் சுவரில் மோதியக் கார்

கோலாலம்பூர், பிப்ரவரி-6-காரோட்டும் போது தூங்கி வழிந்த ஓட்டுநர், காரை பள்ளித் தடுப்புச் சுவரில் மோதச் செய்துள்ளார்.

இச்சம்பவம் கோலாலம்பூர், Jalan Kampung Pasir-ரில் உள்ள சரஸ்வதி தமிழ்ப் பள்ளியில் நேற்று விடியற்காலை 1.50 மணிக்கு நிகழ்ந்தது.

எனினும் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என, போக்குவரத்துப் போலீஸ் உறுதிப்படுத்தியது.

சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடந்தவற்றை போலீசில் புகார் செய்துள்ளார்.

1987-ஆம் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!