Latestஅமெரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் சஃபாரி பயணத்தில் சிங்கம் தாக்கி ‘Game of Thrones’ எடிட்டர் உயிரிழப்பு

கேப்டவுன், நவம்பர்-15, உலகப் புகழ்பெற்ற Game of Thrones தொடரின் தயாரிப்பு அணியுடன் பணியாற்றிய எடிட்டர் ஒருவரை சிங்கம் தாக்கி கொன்ற துயரச் சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

29 வயது Katherine Chappell, சஃபாரி பூங்காவில் திறந்த வாகனத்தில் பயணம் செய்தபோது, திடீரென ஒரு சிங்கம் வேகமாக பாய்ந்து, அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறுகின்றனர்.

பூங்கா பணியாளர்கள் உடனடியாக உதவி செய்ய முயன்றாலும், கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஃபாரி விலங்குகள் கணிக்க முடியாதவை என்றும், சுற்றுலாப் பயணிகள் எப்போதும் பாதுகாப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விலங்கியல் நிபுணர்கள் பலமுறை வலியுறுத்திய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Game of Thrones தயாரிப்புக் குழுவினரும் இரசிகர்களும் இச்செய்தியால் அதிர்ச்சியடைந்திருப்பதுடன், அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் பங்களிப்புகளையும் சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!