
போர்டிக்சன், ஆகஸ்ட்-4- சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய மாதம் அனுசரிக்கப்படும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்காக மலேசியக் கொடியைப் பறக்க விட்டு போர்டிக்சன் சீனப்பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பள்ளி வளாகத்தில் Jalur Gemilang கொடி தலைக்கீழாக பறக்க விடப்பட்டதே அதற்குக் காரணம்.
கொடியை கம்பத்தில் ஏற்றியப் பள்ளிப் பணியாளர் அத்தவற்றை கவனிக்கவில்லை; ஆனால் அது பொது மக்களிள் கண்களில் பட்டு, புகைப்படங்கள் வைரலாகி விட்டன.
இதையடுத்து தெரியாமல் நடந்த தவற்றுக்காக மன்னிப்புக் கேட்பதாக, பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“இதுவொரு கடுமையான தவறு என்பதை ஒப்புக் கொள்கிறோம்; இனியும் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என அவ்வறிக்கைக் கூறியது.
கொடியேற்றுவது தொடர்பான SOP நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு, கண்காணிப்பும் வலுப்படுத்தப்படுமென பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது.