
கோலாலம்பூர், ஜனவரி-30 – தைப்பூசப் பெருவிழா, ஆன்மீக உணர்வு, மன அமைதி மற்றும் குடும்பம், சமூகத்திற்கு ஆசீர்வாதம் தரும் நாளாக அமையட்டும் என, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஏரான் அகோ டாகாங் மலேசிய இந்துக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளர்.
மதங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் புரிதலானது, நாட்டின் செழிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அடிப்படையாகும்.
சர்ச்சை அல்லது பிரிவினையை தூண்டும் கருவியாக மதம் பயன்படுத்தப்படக் கூடாது…குறிப்பாக சமூக ஊடகங்களில் இன-மதவாத வெறுப்புகள், பாகுபாடு ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, நல்லெண்ணம், பரஸ்பர மரியாதையை வளர்க்க வேண்டும்.
பன்முக கலாச்சாரம் மலேசியாவுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.
அது நமது தேசிய அடையாளத்தை வளப்படுத்தி, ஒற்றுமையான, அமைதியான மலேசியாவை உருவாக்கும் தூணாக உள்ளது.
எனவே இந்த உணர்வின் அடிப்படையில் தைப்பூசத்தைக் கொண்டாடுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.



