Latestமலேசியா

தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் LGBTQ முத்தக் காட்சியா? பொங்கி எழுந்த வலைத்தளவாசிகள்; ஒளிபரப்பை நிறுத்தியது RTM

கோலாலம்பூர், நவம்பர் 18- மலேசிய வானொலி – தொலைக்காட்சியான RTM-மில் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் இரண்டு அப்பாக்கள் முத்தமிடும் காட்சி ஒளிபரப்பாகியதால் மலேசியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“இது LGBTQ எனப்படும் தன்பாலின ஈர்ப்பு உறவுகளை சாதாரணமாக்குகிறது” எனக் கூறி சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் விவாதமும் கிளம்பியுள்ளது.

அதே சமயம் சிலர், _“இக்காலக்கட்டத்தில் பலதரப்பட்ட ‘குடும்பங்களை’யும் குழந்தைகள் காண்பதில் தவறில்லை” என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனினும், ‘Santiago of the Seas’ எனும் அந்த கார்டூனின் 22-ஆவது தொடரில் தன்பாலின ஈர்ப்பை ஊக்குவிக்கும் எந்தவோர் அம்சமும் இல்லையென RTM விளக்கமளித்துள்ளது.

என்றாலும், மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு அம்சமும் இல்லாதிருப்பதை உறுதிச் செய்வதற்காக, அந்த கார்டூனின் முழு உள்ளடக்கமும் மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட ஏதுவாக, அதன் ஒளிபரப்பை RTM நிறுத்தியுள்ளது.

மலேசியாவில் ஒளிபரப்புக் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருந்தாலும், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் இடம் பெறும் இதுபோன்ற காட்சிகள் சில நேரங்களில் தணிக்கையில் தப்பி விடுகின்றன.

இந்நிலையில் தணிக்கை, கலாச்சார மதிப்புகள் மற்றும் உள்ளூர் நேயர்கள் மீதான உலக ஊடகங்களின் தாக்கம் மீதான கேள்விகளை இச்சம்பவம் எழுப்புகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!