பெர்த், செப் 17 – விமானத்தில் இடையூறு விளைவித்ததற்காக, ஆஸ்திரேலியா பயணி ஒருவருக்கு கணிசமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 25ஆம் திகதி பெர்த்திலிருந்து (Perth) சிட்னிக்குப் புறப்பட்ட விமானத்தில், அந்த 33 வயது ஆஸ்திரேலியா ஆடவன் குடிபோதையில் கழிவறையில் தன்னை பூட்டிக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறான்.
இவனின் நடத்தையால் அந்த விமானம் மீண்டும் பெர்த்துக்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பெர்த் நீதிமன்றம் அந்த ஆடவருக்கு 9,000 ஆஸ்திரேலியா டாலர் அபராதம் விதித்ததோடு, வீணான எரிபொருளுக்கு 8,630 ஆஸ்திரேலியா டாலர் என மொத்தம் 17,630 ஆஸ்திரேலியே டாலர் அதாவது 50,717 ரிங்கிட் 46 சென் செலுத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கு, இனி விமானங்களில் தேவையற்ற இடையூறுகளையும் சர்ச்சைகளையும் உருவாக்குபவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும் என ஆஸ்திரேலியா கூட்டரசு காவல்துறை கூறியுள்ளது.