
கோலாலம்பூர், ஜூலை 3 – மடானி பொருளாதார கட்டமைப்பின் கீழ் நிதி நிலைத்தன்மையை நோக்கி மூன்று கட்டங்களில் சீர்திருத்தம் நடைபெற்று வருவதாக USTM பொருளாதார வல்லுநர் ஜோஃப்ரி வில்லியம்ஸ் கூறினார்.
முதல் கட்டம்: மானிய மறுசீரமைப்பின் மூலம் மின்சாரம், டீசல் மற்றும் பிற துறைகளில் இருந்து 21 பில்லியன் ரிங்கிட் ஆண்டுதோறும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டம்: HVG, DGT, CGT, LVG போன்ற வரிகள் மற்றும் SST விரிவாக்கம் மூலம் ஆண்டுக்கு 12.5 பில்லியன் ரிங்கிட் வருமானம் அதிகரிக்கும்.
மூன்றாவது கட்டம்: பெட்ரோனாஸ் போன்ற நிலைமாறும் வருவாயில் இருந்து விலகி, gig economy மற்றும் e-payments போன்ற புதிய துறைகள் வரிவசூலுக்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில், STR மற்றும் SARA திட்டங்கள் 13 பில்லியன் ரிங்கிட் செலவில் 9 மில்லியன் மக்கள் பயன்பெற உதவுவதோடு, மருத்துவம், கல்விக்கான செலவுகள் 10% உயர்ந்துள்ளன.
நிதி சீர்திருத்தங்கள் தற்போது நன்மையளிக்கத் தொடங்கியுள்ளன; ஆனால் வருவாய் உயர்வோடு விவேகமான செலவினம் மற்றும் ஊழல் ஒழிப்பும் தேவை;
அதே சமயம், இதன் மூலம் கிடைக்கப் பெறும் சமூக நன்மைகளை தெளிவாக மக்கள் மனதில் பதியச் செய்ய அரசு முழு வீச்சில் விளக்கமளிப்புகளை நடத்த வேண்டுமென ஜோஃப்ரி வலியுறுத்தினார்.