
கோலாலம்பூர், ஜன 23 – கோலாலம்பூர் , கம்போங் பெலாமியில் நிர்வானா மயானத்திற்கு அருகே நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள், இரண்டு வாகனங்கள் மற்றும் பதனப்படுத்தும் வசதியைக் கொண்ட 2 கொள்கலன்களும் அழிந்தன.
இன்று காலை மணி 7.38க்கு அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து ஹங்துவா மற்றும் புடு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மையத்தின் தீயணைப்பு அதிகாரி முகமட் பைஸ் ஹர்ஸ்மி ( Mohamad Faiz Harzmi )
தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து போராடி தீ சுற்று வட்டார பகுதிகளுக்கு பரவுவதை தடுத்தனர். அந்த தீவிபத்தில் எவரும் சிக்கிக் கொண்டதாகவோ அல்லது காயம் அடையவில்லையென முகமட் பைஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 100 விழுக்காடு அழிவை ஏற்படுத்திய இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை.



