Latestமலேசியா

நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைப்பெற்ற சதுரங்கப்போட்டி

சிரம்பான், ஜன 13- நெகிரி செம்பிலானின் Yang di-Pertua Besar Tuanku Muhriz அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு Tunku Besar Seri Menanti கிண்ணத்திற்கான சதுரங்கப் போட்டி அண்மையில் Seri Menanti பொது மைதானத்தில் நடைபெற்றது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மொத்தம் 10,000 ரிங்கிட் ரொக்க பரிசுத் தொகைக் கொண்ட பொதுப் பிரிவு, 17 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள், 12 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் மற்றும் 9 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் சதுரங்க விளையாட்டாளர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் Master பெண் போட்டியாளரான (WCM) நித்யலக்ஸ்மி சிவநேசனுடன் ( Nithyalaksmi Sivanesan ) Tunku Besar Seri Menanti அவர்களுடன் சதுரங்கம் விளையாடினார்.

இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் பிரிவில் நீலாய் பல்கலைக்கழக மாணவரான ஜெயசூரியா தமிழரசு வெற்றிபெற்று 300 ரிங்கிட் ரொக்கப் பரிசு தொகையுடன் வெற்றிக் கிண்ணம் , பதக்கம் மற்றும் சான்றிதழையும் பெற்றார்.

ஆறாவது முறையாக நடைபெற்ற இந்த போட்டி Tengku Ali Ridaudin Ibni Tuanku Mukris முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவில் மாஸ்டர் நித்யா லெட்சுமி சிவநேசனும் கலந்துகொண்டது சதுரங்க ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

சதுரங்க விளையாட்டில் புதிய திறமைகளை வெளிக்கொணர ஒரு தளமாக இப்போட்டி இருந்ததோடு பல்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஒன்றிணைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!