Latestமலேசியா

நோய்வாய்ப்பட்டுள்ள காமன்வெல்த் முன்னாள் பெருநடை வீரர் ஜி.சரவணன்; நேரில் சந்தித்து உதவி வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர்கள்

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-2-1998 கோலாலாம்பூர் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் பெருநடைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜி. சரவணன்.

காமன்வெல்த் போட்டி வரலாற்றில் திடல் தடப் போட்டிகளில் மலேசியா பெற்ற முதல் மற்றும் ஒரே தங்கப் பதக்கம் அதுவாகும்.

இப்படி நாட்டுக்கு பெருமை சேர்த்த சரவணன் தற்போது Motor Neuron Disease எனப்படும் ஒருவித நரம்பியல் நோயுடன் போராடி வருகிறார்.

இன்று 56 வயதில், நடமாட முடியாமல், பேச மற்றும் உணவுண்ணக் கூட முடியாமல் அவர் படுத்தப் படுக்கையாக இருப்பது வேதனையளிக்கிறது.

அவரின் நிலையறிந்த, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்டோர், சரவணனை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

விளையாட்டுக்கான அவரது சேவையை பாராட்டியும், குடும்பத்திற்கு ஆதரவாகவும், அறப்பணி வாரியத்தின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

சரவணனின் உறுதி மற்றும் போராட்டம், எதிர்கால தலைமுறைக்கு என்றும் ஒரு உத்வேகமாக இருக்குமென, அறப்பணி வாரியத் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

களத்தில் நாட்டுக்காக தங்கப் பதக்கத்திற்கு போராட்டம் நடத்திய சரவணன், இன்று உயிருடன் போராட்டம் நடத்தி வருகிறார்; அவரின் உடல்நிலை தேறி பழைய தெம்பைப் பெற பிராத்திப்போம். ..

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!