Latestமலேசியா

பச்சைப் பெட்டியில் மாண்டரின் ஆரஞ்சு: ரமலான், ராயா கொண்டாட்டத்தில் புதிய கலாச்சாரம்

கோலாலாம்பூர், மார்ச்-12-ரமலான் மற்றும் ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பச்சை நிற ராயா பெட்டிகளில் மாண்டரின் ஆரஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு, இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சாதாரணமாக, சீன புத்தாண்டில் சிவப்பு பெட்டிகளில் விற்கப்படும் இந்த ஆரஞ்சுகள், ஹரி ராயாவை ஒட்டி இப்போது பச்சை நிறத்தில் வந்துள்ளதால், கலாச்சார சங்கமத்தின் சின்னமாக சமூக ஊடகங்களில் பாராட்டப்படுகிறது.

புகைப்படம் வைரலாக, “இது தான் மலேசியாவின் தனித்துவம்” என வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்தனர்.

சிலர், சீன புத்தாண்டுக்குப் பிறகு மீதமுள்ள ஆரஞ்சுகளை வீணாக்காமல், ராயா கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான நடைமுறை எனக் கூறினர்.

பலரும், இது 1980-களில் அறிமுகமான பச்சை அங்க்பாவ் அன்பளிப்பு போல, புதிய கலாச்சார மரபாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!