
சென்னை, நவம்பர்-2, ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த ‘கருப்பி’ என்ற நாய், தீபாவளியின் போது பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு அலறி சாலையில் ஓடிய போது, வாகனத்தால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
‘கருப்பி’யைப் போலவே ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்தவரான அதன் உரிமையாளர், நாயை அடக்கம் செய்துள்ளார்.
அப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
படத்தில் கவனத்தை ஈர்த்த நாயின் இரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.