
கோலாலம்பூர், பிப்ரவரி-18-பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் தொடர்பான குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் RM10,000 அபராதம் விதிக்கப்படும் என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் மீண்டும் எச்சரித்துள்ளார்.
உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான பட்டாசுகள் வைத்திருப்பதும், தயாரிப்பதும் 1957-ஆம் ஆண்டு வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றார் அவர்.
2025 தடைச் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் நோட்டீஸின் படி அங்கீகரிக்கப்பட்ட 45 வகை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன; Pop‑Pop, Happy Boom போன்றவை அதில் அடங்கும்.
ஆனால் அவற்றை விற்கக் கூட உள்ளூர் போலீஸாரின் பெர்மிட் தேவையாகும் என IGP நினைவுறுத்தினார்.
எனவே இந்த சீனப் பெருநாளைப் பாதுகாப்பாக கொண்டாடுமாறு பொது மக்களை அவர் வலியுறுத்தினார்.
சட்டத்தை மீறினால், கொண்டாட்டம் தண்டனையாக மாறும் என்றார் அவர்.



