புத்ரா ஜெயா, டிச 10 – Batu Puteh, Batuan Tengah மற்றும் Tubir Selatan இறையாண்மை வழக்குகள் தொடர்பான அரச விசாரணை ஆணைக்குழுவின் முடிவுகளைத் தொடர்ந்து எந்தவொரு குற்றவியல் விசாரணையையும் எதிர்நோக்க தாம் தயாராய் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருக்கிறார். அரச விசாரணை முடிவுகள் தனது கௌரவத்தை அழிக்கும் அரசியல் தன்மை கொண்டவை என்று அவர் கூறினார். இதற்கு நான் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளேன். பத்து புத்தே தொடர்பான முடிவு அந்த நேரத்தில் அமைச்சரவையால் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
என் மீது ஏதேனும் குற்ற விசாரணை நடந்தால், அதனை எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இது தேசத்துரோகம் என்றால், அப்போதைய துணைப்பிரதமர் உட்பட அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் துரோகிகள்தான் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்போது அவரது இரண்டு வழக்கறிஞர்களான Zainur Zakaria மற்றும் Muhammad Rafique Rashid Ali ஆகியோரும் உடனிருந்தனர்.