பத்துமலை திருத்தலத்தில் புத்தாண்டு தினத்தில் 140 அடி முருகனுக்கு 9ஆவது ஆண்டு பன்னீர் அபிஷேகம்
கோலாலம்பூர், டிச 23- பத்துமலை திருத்தலத்தில் 140 அடி உயரத்தில் அமைந்துள்ள
உலகின் மிகப் பெரிய முருகன் சிலையின் திருவடிக்கு எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி 2025 புத்தாண்டு தினத்தில் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் 9ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் புதன்கிழமையன்று காலை 9 மணிக்கு மேல் நடைபெறும் சிறப்பு பூசைக்குப் பின் பக்தர்கள் அனைவரும் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதற்கு அழைக்கப்படுகின்றனர்.
அன்றைய தினம் பொது விடுமுறையாகவும் இருப்பதால் அதிகமான பத்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்பதால் அனைவரும் வரிசையாக நின்று திருமுருகன் திருவடிக்கு அபிஷேகம் செய்து இறையருள் பெற்றுச் செல்வதோடு அங்கு நடைபெறும் அன்னதானத்திலும் கலந்துகொள்ளும்படி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.