பாரீஸ், அக்டோபர்-9 – அல்-கைடா பயங்கரவாத கட்டமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லாடனின் மகன் ஓமார் லாடன், பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஓவியரான 43 வயது ஓமார் சில ஆண்டுகளாகவே நோர்மாண்டி (Normandy) நகரில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் விரட்டப்பட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிர்ந்ததால் ஓமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இனி எந்தவொரு காரணத்திற்காகவும் ஓமார் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழையவே முடியாது என்றார் அவர்.
கடந்தாண்டு தனது தந்தையின் பிறந்த நாளன்று, பயங்கரவாதத்தைப் போற்றும் வகையில் ஓமார் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவரான அவரின் தந்தை ஒசாமா பின் லாடன், 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.