Latestமலேசியா

பலாக்கோங்கில் பெரும் தீ விபத்து; 4 தொழிற்சாலைகள் அழிந்தன

பலாக்கோங், மார்ச்-15-சிலாங்கூர், பலாக்கோங், தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் அழிந்தன.

ஒரு தொழிற்சாலை முழுமையாக எரிந்துபோனது; மற்ற 3 தொழிற்சாலைகள் 50 முதல் 90 விழுக்காடு வரை சேதமடைந்தன.

இரவு 9.24 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், 7 தீயணைப்பு நிலையங்களிலிருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

தீ பரவலைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதால், 10.18 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!