Latest

பள்ளி வேனில் சிறுவன் மரணம் பெற்றோர் வழக்கு

கோலாலம்பூர், அக் 30 –

ஜோகூரில், கெலாங் பாத்தாவில் , ஏப்ரல் 30 ஆம் தேதி பூட்டிய பள்ளி வேனில் பல மணி நேரம் கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இறந்த ஐந்து வயது சிறுவன் தியோ யூ ஸீயின் ( Teo Yu Ze ) பெற்றோர், ஜோகூர் பாரு உயர் நீதிமன்றத்தில் ஐந்து வெவ்வேறு தரப்பினருக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மழலையர் பள்ளி நடத்துனர்களான லீ சீக் லு Lee Cheak Lu மற்றும் YK கல்வி குழுமம் சென், பெர்ஹாட், டபள் டிரி டிரான்ஸ்போன்ட் சென்டிரியான் பெர்ஹாட், பள்ளி வேன் ஓட்டுநர் யாவ் சீ வெங் ( Yau Chee Weng) மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இந்த வழக்கின் ஐந்து பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக பெற்றோர் Teo Jia Meng , Yu Yue Yang ஆகியோரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் Ng Kian Nam தெரிவித்தார்.

அலட்சியம் அல்லது கவனக்குறைவுக்கான பொறுப்பை ஒப்புக்கொள்வது மற்றும் மன்னிப்பு கோரும்படி கேட்டுக்கொள்ளும் ஜூன் 20 ஆம் தேதியிடப்பட்ட கடிதத்தை பிரதிவாதிகள் தரப்பு ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து சிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் மழலையர் பள்ளி வழிகாட்டுதல்கள், கல்விச் சட்டம் 1996 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 ஆகியவற்றின் கீழ், பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதற்காக மழலையர் பள்ளி நடத்துபவர்களுக்கு எதிராக உறுதியான அமலாக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் பிரதிவாதிகளில் ஒன்றாக கல்வி அமைச்சு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் பள்ளிகளில் நடந்த உயிரிழப்புகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் பாதுகாப்புக் கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன என்றாலும், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படவோ அல்லது பொறுப்பானவர்களைப் பொறுப்பேற்கவோ தவறிவிட்டதால் மரணம் அடைந்த சிறுவனின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என வழக்கறிஞர் Ng தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!