
கோலாலம்பூர், ஜனவரி 22 – பாதிரியார் Raymond Koh கடத்தல் வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தக் கோரி அரசு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் அரசு தரப்பு இதற்கு எதிராக இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கும் முனைப்பில் உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிரியார் கோ-வின் குடும்ப வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மனுவானது, கோ-வின் குடும்பத்தாருக்கு கிடைத்த நீதிமன்ற வெற்றியை தடுக்கும் ஒன்று என்றும், மேலும் நவம்பர் 5 ஆம் தேதி தீர்ப்புக்குப் பிறகு மனு உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்த மனு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஜனவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த ஆண்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாதிரியாரின் கடத்தலில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தீர்மானித்து, அரசுக்கு 33 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு விதித்தது. ஆனால், பாதிரியாரின் இருப்பிடம் தெரிய வரும் வரை, அந்த தொகை நம்பிக்கை நிதியில் (trust fund) வைக்கப்படும் என உத்தரவிட்டது.



