Latestமலேசியா

பாத்தாங் பெனார் நிலையம் அருகே locomotive தடம் புரண்டது; கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM சேவைகள் பாதிப்பு

நீலாய், ஜனவரி-25 – இன்று காலை, நெகிரி செம்பிலான், பாத்தாங் பெனார் KITM நிலையம் அருகே ஒரு locomotive தடம் புரண்டதால், கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM கம்யூட்டர் இரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இச்சம்பவம் காரணமாக, பத்து மலை – பூலாவ் செபாங் பாதையில் இயங்கும் இரயில்கள் பாத்தாங் பெனார் நிலையத்தில் நிற்காமல் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் சிரமத்தை உணர்ந்து, KTM நிறுவனம் நீலாய், பாத்தாங் பெனார் மற்றும் பாங்கி நிலையங்களில் shuttle பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.

KTM தொழில்நுட்ப குழு அவசர சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, பயணிகள் MyRailtime செயலி மற்றும் KTM சமூக ஊடகங்களைப் பார்த்து அண்மையத் தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!