பட்டவொர்த், டிசம்பர்-13, கடந்த வாரம் பாராங் கத்தியேந்தி கும்பலாகக் கொள்ளையிட்டதாக, இரு நண்பர்கள் பினாங்கு பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
எனினும் 33 வயது கே. ஸ்ரீதரன் நாயுடு, 33 வயது ஜே. மூஹிலன் நாயுடு இருவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
பாராங் கத்தி முனையில் 57 வயது ஆடவரின் Honda Accord காரையும், 54,000 ரிங்கிட் ரொக்கத்தையும் கொள்ளையிட்டதாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
டிசம்பர் 6-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, பட்டவொர்த் தாமான் புக்கிட் கெச்சில் சாலைச் சந்திப்பில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இருவரும் தலா 10,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கு ஜனவரி 15-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.