
குவாலா குபு பாரு, ஜூலை-6,
சிலாங்கூர் குவாலா குபு பாரு அருகே, ஆற்றைக் கடந்து நேற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வடிவேலு கணேசன் என்பவரை , மாடு ஒன்று எட்டி உதைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாடு உதைத்ததில் பாலத்திற்கு அடியில் உள்ள ஆற்றில் 53 வயதான அந்நபர் தூக்கி வீசப்பட்டது, வைரலாகியுள்ள CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் Sungai Gapi East Division தோட்டத்தில் நடைபெறவுள்ளது நிலையில் அச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.