
பினாங்கு, டிசம்பர் 1 – இன்று அதிகாலை, பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ்டவுன் பகுதியிலுள்ள Mount Erskine சாலையில், தொழிற்சாலை வேன் ஒன்று கவிழ்ந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து எழுவர் தீவிர காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவல் அறிந்தவுடனேயே, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்ட எட்டு பேரில் நான்கு பேர் வேனின் உள்பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் ஜான் சாகுன் பிரான்சிஸ் (John Sagun Francis) கூறினார்.
அந்நிலையில், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு துறையினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேற்றினர்.
விபத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உடல் பினாங்கு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.



