
ஜார்ஜ் டவுன், நவம்பர் 18 – பினாங்கு பாலங்களில் தடுப்புகள் (barriers) அமைப்பதன் வழி மட்டுமே தற்கொலை முயற்சிகளைத் தடுக்க முடியாது. மாறாக மனநல விழிப்புணர்வை உயர்த்துவதே இதற்கு முக்கிய தீர்வாக இருக்குமென்று மாநில செயலாளர் டேனியல் குவி ( Daniel Gooi) கூறியுள்ளார்.
பினாங்கு பாலங்களில் தற்கொலை சம்பவங்கள் புதிதான ஒன்று இல்லை என்றும் அதே நேரத்தில் பாலங்களின் மேலாண்மை மாநில அரசிற்கு கீழ் உட்படுத்தப்படவில்லை என்றும் விளக்கப்பட்டது.
மேலும் ஊடகங்கள் தற்கொலை சம்பவங்களைப் பற்றிய செய்திகளை பொறுப்புடன் வெளியிட வேண்டும். காரணம் தவறான செய்தியிடலால் பாதிக்கப்படும் நபர்களை மேலும் ஆபத்துக்குள் தள்ளும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்தார்.
பினாங்கு மாநிலத்தில், 10 இளைஞர்களில் ஒருவருக்கு தற்கொலை சிந்தனை, திட்டம் அல்லது முயற்சி இருந்து வருகின்றதென்று நேற்றைய சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



