
பிப்ரவரி 22 வரை அனைத்து வழி ETS இரயில் பயணங்களுக்கும் 30% கழிவுச் சலுகை
கோலாலம்பூர், பிப்ரவரி-19,
ETS இரயில் சேவையின் அனைத்து வழித்தடப் பயணங்களுக்கும் KTMB நிறுவனம் கூடுதலாக 10 விழுக்காடு கழிவுச் சலுகையை அறிவித்துள்ளது.
முன்னதாக, சீனப்புத்தாண்டு மற்றும் இன்றைய ரமலான் நோன்பு மாதத் தொடக்கத்தை ஒட்டி பிப்ரவரி 18 முதல் 22 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ETS பயணங்களுக்கு மட்டும் 20 விழுக்காடு கழிவுச் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அது தற்போது 30 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, அனைத்து வழித்தடங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை தனது ஃபேஸ்புக் பதிவில் KTMB உறுதிப்படுத்தியது.
சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்புவோரின் வசதிக்காக இச்சலுகை வழங்கப்படுகிறது.
பயணத்தை முறையாகத் திட்டமிடுமாறும் பயணிகளை அது அறிவுறுத்தியது.



